பாஜக எம்பியை கைது செய்ய வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி வீராங்கனைகள் போராட்டம்: புதிய நாடாளுமன்றம் திறக்கும் நாளில் முற்றுகை

புதுடெல்லி: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரஜ் பூஷனை கைது ெசய்யக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வரும் 28ம் தேதி (புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்) நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே பெண்களின் மகாபஞ்சாயத்து நடைபெறும் என்று பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்நிலையில், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்கள், தற்போது அவர்கள் தங்களது போராட்ட எல்லையை விரிவுபடுத்தியுள்ளனர்.
கடந்த வாரம் கன்னாட் பிளேஸில் பேரணியாக சென்றனர்.

பின்னர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்தினர். தற்போது இன்று மாலை இந்தியா கேட் பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் போலீசார் இவர்களின் மெழுகுவர்த்தி போராட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. இதுகுறித்து மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறுகையில், ‘பிரிஜ் பூஷனை கைது செய்ய வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும். 30 நாட்களுக்கு மேலாகியும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை’ என்றார். மேற்கண்ட விவகாரத்தில் பிரஜ் பூஷனுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தான் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாராக இருப்பதாக கூறினார். அதேபோல் பாதிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் தரப்பிலும், உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாராக இருப்பதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

The post பாஜக எம்பியை கைது செய்ய வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி வீராங்கனைகள் போராட்டம்: புதிய நாடாளுமன்றம் திறக்கும் நாளில் முற்றுகை appeared first on Dinakaran.

Related Stories: