குன்றத்தூர் அருகே சாலையில் கிடந்த வெங்காய மூட்டைகளை எடுத்து சென்ற பொதுமக்கள்

குன்றத்தூர்: வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை, குன்றத்தூர் அருகே சாலையின் ஓரத்தில் மூட்டை, மூட்டையாக வெங்காய மூட்டைகள் கொட்டி கிடந்தது. அந்த வழியாக சென்று வாகன ஓட்டிகள் இதனை கண்டதும் வாகனங்களை நிறுத்திவிட்டு இறங்கி சென்று ஒவ்வொருவராக வெங்காய மூட்டைகளை எடுக்க ஆரம்பித்தனர். இதனை யாரும் கேட்க வராததால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு சாலையின் ஓரத்தில் கொட்டி கிடந்த வெங்காய மூட்டைகளை தங்களது, இருசக்கர வாகனத்தில் 3 முதல் 4 மூட்டைகளை சர்வ சாதாரணமாக எடுத்து கொண்டு சென்றனர். பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் அங்கு கொட்டி வைக்கப்பட்டிருந்த வெங்காய மூட்டைகளை நொடி பொழுதில் தூக்கி சென்றனர். வெங்காய மூட்டைகளை கொட்டி சென்றது யார்? எதனால் கொட்டினார்கள் என்பது குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post குன்றத்தூர் அருகே சாலையில் கிடந்த வெங்காய மூட்டைகளை எடுத்து சென்ற பொதுமக்கள் appeared first on Dinakaran.

Related Stories: