மக்கள் குறைதீர் கூட்டம் 283 மனுக்கள் குவிந்தன

 

புதுக்கோட்டை, மே 23: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தலைமையில் (நேற்று) நடைபெற்றது.
கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல்; போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 283 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.8,000 மதிப்புடைய மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களையும் மற்றும் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.13,500 மதிப்புடைய தக்க செயலியுடன் கூடிய திறன்பேசிகளையும் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.56,500 மதிப்புடைய நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டம் 283 மனுக்கள் குவிந்தன appeared first on Dinakaran.

Related Stories: