சான்றிதழ் வழங்கி முதல்வர் பெருமிதம் காரைக்கால் என்ஐடியில் பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கம்

 

காரைக்கால், மே 23: காரைக்காலில் அமைந்துள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் கட்டிட பொறியியல் துறை சார்பில் பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு என்ற தலைப்பில் 5 நாள் சர்வதேச கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சிதம்பரம் பிள்ளை நிர்வாக வளாகத்தில் இணையவழி மூலம் நேற்று தொடங்கியது. கருத்தரங்கை பதிவாளர் முனைவர் சுந்தரவரதன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். கழகத்தின் இயக்குனர் முனைவர்.கணேசன் கண்ணபிரான் (பொறுப்பு) இணையவழி மூலம் கலந்து கொண்டார். முன்னதாக இக்கருத்தரங்கிற்கு வந்திருந்த அனைவரையும் முனைவர் நிதி.எம் வரவேற்று பயிலரங்கு குறித்து விளக்கினார்.

இக்கருத்தரங்கில் பல்வேறு நிறுவனங்களின் ஆசிரிய உறுப்பினர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களிடமிருந்து பெறப்பட்ட 26 பதிவுகள் விளக்கப்படவுள்ளது. பேரிடர் தாங்கும் கட்டமைப்புகள் மற்றும் பேரிடர் தணிப்பு துறையில் பணிபுரியும் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான ஆராய்ச்சிப் பகுதிகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், டெவலப்பர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் இக்கருத்தரங்கில் உரையாற்ற உள்ளார்கள்.

The post சான்றிதழ் வழங்கி முதல்வர் பெருமிதம் காரைக்கால் என்ஐடியில் பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: