திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.8.29 கோடி மதிப்பு திட்ட பணிகள் துவக்கம்

திண்டுக்கல், மே 23: திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் ரூ.8 கோடியே 29 லட்சம் மதிப்பு திட்ட பணிகளுக்கான பூமி பூஜை நேற்று சிறுமலை செட் அருகே நடைபெற்றது. மேயர் இளமதி தலைமை வகித்தார். துணை மேயர் ராஜப்பா, ஆணையர் மகேஸ்வரி, பொறியாளர் நாராயணன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகராட்சியில் 15வது நிதி குழு திட்டம் 2022-2023 மூலம் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி, மழைநீர் சேகரிப்பு மையங்கள் அமைக்கும் பணி உள்ளிட்ட 38 பணிகள் ரூ.421.95 லட்சம் மதிப்பில் பூமி பூஜையுடன் துவங்கப்பட்டது.

தொடர்ந்து மாநகராட்சி சேமிப்பு மற்றும் வட்டி நிதி 2022-2023 திட்டத்தின் மூலம் 1 முதல் 48 வார்டுகளுக்கும் 26 ஆகிய வார்டுகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, மராமத்து பணி, சிறு பாலங்கள் அமைத்தல், பேவர் பிளாக்குகள் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.407.50 லட்சம் மதிப்பில் பூமி பூஜையுடன் துவங்கப்பட்டன. இதில் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.8.29 கோடி மதிப்பு திட்ட பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: