பழநியில் அக்னி நட்சத்திர கழு திருவிழா நிறைவு:கிரிவல பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

 

பழநி, மே 22: பழநி கோயிலில் அக்னி நட்சத்திர கழு திருவிழாவின் நிறைவு நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சித்திரை மாதம் கடைசி 7 நாட்களும், வைகாசி மாதம் முதல் 7 நாட்களும் அக்னி நட்சத்திர கழு திருவிழா கொண்டாடப்படும். இந்நாட்களில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கிரிவீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வலம் வருவது வழக்கம்.

இந்நேரங்களில் கிரிவீதி பகுதியில் வீசும் சஞ்சீவி காற்றை சுவாசித்தால் உடல் புத்துணர்ச்சி பெற்று சுறுசுறுப்பு அடையும் என்பது நம்பிக்கை. அக்னி நட்சத்திர கழு திருவிழாவின் நிறைவு நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். நடந்து செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாலை நேரங்களில் கிரிவீதியில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. சீருடை போலீசாருடன், மப்டி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

The post பழநியில் அக்னி நட்சத்திர கழு திருவிழா நிறைவு:கிரிவல பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது appeared first on Dinakaran.

Related Stories: