வைகாசி தொடர் முகூர்த்தம் எதிரொலி திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு

திண்டுக்கல், மே 22: திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் வைகாசி தொடர் முகூர்த்தம் காரணமாக பூக்கள் விலை அதிரடியாக உயர்ந்து விற்பனையானது. அதிகபட்சமாக ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.500க்கு விற்பனையானது. திண்டுக்கல் பஸ் ஸ்டாண் அருகே அண்ணா பூமார்க்கெட் செயல்படுகிறது. இங்கு பூக்கள் விற்பனைக்காக திண்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து ஈரோடு, திருச்சி, சேலம் சென்னை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு பூக்கள் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் வைகாசி மாதம் தொடர் முகூர்த்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.400க்கு விற்பனையான மல்லிகை பூ நேற்று ரூ.500க்கு விற்பனையானது. இதைபோல் ரூ.200க்கு விற்பனையான கனகாம்பரம் ரூ.300க்கும், ரூ.80க்கு விற்பனையான முல்லைப் பூ ரூ.150க்கும், ரூ.150க்கு விற்பனையான ஜாதிப்பூ ரூ.200க்கும், ரூ.10க்கு விற்பனையான சம்பங்கி ரூ.50க்கும், ரூ.35க்கு விற்பனையான ரோஸ் ரூ.50க்கும் விற்பனையானது. மேலும் காக்கரட்டான் ரூ.150க்கும், கோழி கொண்டை ரூ.40க்கும், செண்டு மல்லி ரூ.30க்கும், பட்டன் ரோஸ் ரூ.150க்கும், செவ்வந்தி ரூ.150 முதல் ரூ.200 வரையிலும், வாடாமல்லி ரூ.30க்கும், அரளிப்பூ ரூ.150க்கும், தாமரைப்பூ ரூ.10க்கும், மரிக்கொழுந்து ரூ.35க்கும் விற்பனை செய்யப்பட்டது.

The post வைகாசி தொடர் முகூர்த்தம் எதிரொலி திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு appeared first on Dinakaran.

Related Stories: