காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவில் 90.28 சதவீதம் தேர்ச்சி

காஞ்சிபுரம், மே 20: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று வெளியான 10ம் வகுப்பு தேர்வு முடிவில், 90.28 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2023ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 6.4.2023 முதல் 20.4.2023 வரையிலான நாட்களில் நடைபெற்றது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில், காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு 90.28 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 2023 நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசு தேர்வினை, 8,341 மாணவர்களும், 7,943 மாணவிகளும் என மொத்தம் 16 ஆயிரத்து 284 மாணவர் மற்றும் மாணவிகள் அரசு தேர்வில் கலந்து கொண்டனர்.

இதில், 14,702 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், சராசரியாக 90.28 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர் மாணவர்கள் 85.92 சதவீதமும் மாணவிகள் 94.86 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள், மாணவர்களை விட 8.94 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 184 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில், அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 89 நகராட்சி பள்ளிகளின் எண்ணிக்கை 4 ஆதிதிராவிட நல பள்ளிகளின் எண்ணிக்கை 7, சமூக நலத்துறை பள்ளிகளின் எண்ணிக்கை இரண்டு அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 23 தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 59. அதில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 42 ஆக உள்ளது.

அதில், அரசு பள்ளிகளில் தேர்ச்சி எண்ணிக்கை 8. காஞ்சிபுரம் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் 24 வது இடத்தை பெற்றுள்ளது. அரசு பள்ளிகளின் சராசரி தேர்ச்சி விகிதம் 87.16 சதவீதமாக உள்ளது. மாநில அளவில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டம் 24வது தரவரிசை பெற்றுள்ளது. கடந்தாண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில், மாநில அளவில் 28வது இடத்தில் இருந்த, காஞ்சிபுரம் 3 இடங்கள் முன்னேறி 25வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 1.80 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

88.27% பேர் தேர்ச்சி
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வை 37,443 பேர் எழுதினர். இதில், நேற்று வெளியான பொது தேர்வு முடிவில் 15,752 மாணவர்களும் 17,298 மாணவிகள் என மொத்தம் 33,050 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவர்கள் 83.93 சதவீதமும், மாணவிகள் 92.63 சதவீதம் என மொத்தம் 88.27 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வு முடிவில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் நலப்பள்ளி, அரசு பள்ளி, நகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப்பள்ளி, சுயநிதி பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், செங்கல்பட்டு ஆதிதிராவிடர் பள்ளியில் 692 பேர் எழுதியதில், 535 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 77.31 சதவீதம். ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 192 பேர் எழுதியதில், 187 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97.40 சதவீதம். கன்டோன்மென்ட் போர்டு பள்ளியில் 27 பேர் எழுதியதில், 22 பேர் தேர்ச்சி பெற்றதால், 81.48 சதவீதம். அரசு உதவி பெறும் பள்ளியில் 2,930 பேர் எழுதியதில், 2,618 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 89.35 சதவீதம். அரசு பள்ளியில் 13,586 பேர் எழுதியதில், 10,848 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் சதவீதம் 79.85. நகராட்சி பள்ளியில் 845 பேர் எழுதியதில், 726 பேர் தேர்ச்சி பெற்றதால், 85.92 சதவீதம்.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவில் 90.28 சதவீதம் தேர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: