வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.12 லட்சம் அமைச்சர் வழங்கினார்

விருதுநகர், மே 20: பட்டாசு ஆலை வெடிவிபத்துக்களில் உயிரிழந்த 4 பேரின் வாரிசுதாரர்கள் மற்றும் காயமடைந்த ஒருவர் என 5 பேருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.12.50 லட்சம் நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். உதவித்தொகைகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார். சிவகாசி ஊராம்பட்டி கிராமத்தில் செயல்பட்ட தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் குமரேசன், சுந்தர்ராஜ், அய்யம்மாள் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

மேலும் வெம்பக்கோட்டை வட்டம் பனையபட்டி கிராமத்தில் இயங்கிய பட்டாசு சில்லரை விற்பனை நிலையத்தில் மே 17ல் ஏற்பட்ட வெடிவிபத்தில் செந்தில்குமார் உயிரிழந்தார். பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலை மற்றும் காயமடைந்த சிலோன் காலனியை சேர்ந்த இருளாயிக்கு ரூ.50 ஆயிரம் என ரூ.12.50 லட்சத்திற்கான காசோலைகளை அமைச்சர் வாரிசுதாரர்களிடம் வழங்கினார். டிஆர்ஓ ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.12 லட்சம் அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: