வைகாசி மாத அமாவாசை: அக்னிதீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் நீராடி தரிசனம்

ராமேஸ்வரம்: தை மாத அமாவாசையை முன்னிட்டு இன்று காலை ஏராளமான பக்தர்கள் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். இதையொட்டி இன்று அதிகாலை அக்னிதீர்த்த கடலில் குவிந்த வெளியூர் பக்தர்கள் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து கடலில் நீராடினர்.

பின் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி முதல் பிரகாரத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாத சுவாமி – பர்வதவர்த்தினி அம்பாளை தரிசித்தனர். பின் ராமேஸ்வரம் கெந்தமாதனபர்வதம், தனுஷ்கோடி, குந்துகால் விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளிட்ட பல இடங்களையும் பார்வையிட்டு ஊர்களுக்கு திரும்பினர். பள்ளி கல்லூரி விடுமுறையானதால் அமாவாசையான இன்று தமிழக பக்தர்களே அதிகளவில் கடலில் தீர்த்தமாடினர்.

The post வைகாசி மாத அமாவாசை: அக்னிதீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் நீராடி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: