மறைந்த சென்னை மாநகராட்சி உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார் அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஷீபா வாசி (வார்டு 122), நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் (வார்டு 165) ஆகியோர் மறைவினையொட்டி அவர்களது குடும்ப பாதுகாப்பு நிதியாக தலா ரூபாய் 3 லட்சத்திற்கான காசோலையினை அவர்களது குடும்பத்தினரிடம் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமைச் செயலகத்தில் இன்று (19.05.2023) வழங்கினார். பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள உறுப்பினர்கள் மறைவிற்கு குடும்ப நிவாரண நிதியாக ரூபாய் ஒரு இலட்சம் வழங்கி வந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் இந்த ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை அறிவிப்பில், பொறுப்பில் உள்ள மாமன்ற உறுப்பினர்கள் மரணமடைந்தால், அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண நிதி ரூபாய் ஒரு இலட்சத்திலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மறைந்த ஷீபா வாசி, நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் ஆகிய இரண்டு மாமன்ற உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 3 இலட்சம் குடும்ப பாதுகாப்பு நிதிக்கான காசோலைகள் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் மரு.ஜெ.இராதாகிருஷ்ணன், துணை மேயர் மு.மகேஷ்குமார், மாமன்ற ஆளும் கட்சித் தலைவர் ஆர்.இராமலிங்கம், மாமன்ற செயலாளர் மகேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post மறைந்த சென்னை மாநகராட்சி உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார் அமைச்சர் கே.என்.நேரு appeared first on Dinakaran.

Related Stories: