பெருங்குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கையேடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியீடு

சென்னை: தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘பெருங்குடல் புற்றுநோய்’ குறித்த விழிப்புணர்வு கையேட்டினை நேற்று வெளியிட்டார். தலைமைச் செயலகத்தில், உலக காஸ்ட்ரோலஜி அமைப்பு, தமிழ்நாடு காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் டிரஸ்ட் மற்றும் அப்போலோ மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள பெருங்குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கையேட்டினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இன்றைய நவீன வாழ்க்கை முறைகளால் உலகமெங்கும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்பட்டு வருகிறது.

பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் வாழ்வியல் முறைகளான சரியான உடல் எடையை பராமரித்தல், முறையான தொடர் உடற்பயிற்சி, புகையிலை மற்றும் மது வகைகளை தவிர்த்தல், அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுதல், புற்றுநோய் முன்னெச்சரிக்கை பரிசோதனைகள் மேற்கொள்ளுதல் போன்றவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது, அப்போலோ மருத்துவமனை மருத்துவப் பணிகள் இயக்குநர் வெங்கடாசலம், இரைப்பை குடல் நிபுணர் மற்றும் துறைத் தலைவர் பழனிசாமி, மருத்துவ ஆலோசகர்கள் பிரம்மநாயகம், கார்த்திக் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post பெருங்குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கையேடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: