ஓட்டேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2 பெண்கள் கைது: 2.3 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: ஓட்டேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் வைத்திருப்பவர்கள், கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, G-5 தலைமைச்செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (16.05.2023) ஓட்டேரி, செல்வ பெருமாள் கோயில் தெருவில் கண்காணித்த போது, அங்கு 2 பெண்கள் விற்பனைக்காக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், சட்டவிரோதமாக மேற்படி இடத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 1.அன்பழகி, வ/25, த/பெ.பரத்குமார், எண்.13, செல்வபெருமாள் கோயில் தெரு, ஓட்டேரி, சென்னை 2.பத்மா, வ/55, க/பெ.பிரபாகரன், எண்.73, ஆறுமுகம் தெரு, கொருக்குப்பேட்டை, சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 2.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட அன்பழகி மீது ஏற்கனவே 3 கஞ்சா வழக்குகளும், பத்மா மீது 1 கஞ்சா வழக்கு உள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மேற்படி எதிரிகள் இருவரும், விசாரணைக்குப் பின்னர் நேற்று (16.05.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post ஓட்டேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2 பெண்கள் கைது: 2.3 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: