உத்தமர்கோயில் புதியதேர் வெள்ளோட்டம்

 

சமயபுரம்: திருச்சி அருகே உத்தமர்கோயில் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் நெ.1 டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், 108 திருப்பதிகளுள் ஒன்றான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும் உத்தமர்கோயில் திருத்தலம் அமைந்துள்ளது. இக்கோயிலில் புருஷோத்தம பெருமாளுக்கு சித்திரை பெருந்திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மே 4ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற்றது. மேலும் உத்தமர்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் உபயதாரார்கள் சார்பில் ரூ.55.50 லட்சம் செலவில் புதியதேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. காலை 10.11 மணிக்கு ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து புதிய தேரை இழுத்து சென்றனர். அப்போது கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து தேரில் கும்ப கலசத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

The post உத்தமர்கோயில் புதியதேர் வெள்ளோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: