ஆபரேஷன் சக்சஸ்: ராகுல் உற்சாகம்

மும்பை: காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய கே.எல்.ராகுல், வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ராகுல் (31), கடந்த மே 1ம் தேதி பெங்களூர் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் பீல்டிங் செய்தபோது தொடை பகுதியில் காயம் பலத்த காயம் அடைந்தார். தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால், நடப்பு தொடரி எஞ்சிய ஆட்டங்களில் இருந்து ராகுல் விலக, க்ருணால் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலிலும் ராகுல் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்தது. இந்திய அணியில் அவருக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ‘அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இயல்பாக இருக்கவும், சிகிச்சைகளை இலகுவாக எதிர்கொள்ளவும் உதவிய மருத்துவர்கள், மருத்துவக் குழுவினருக்கு நன்றி. இப்போது குணமாகி வருகிறேன். மீண்டும் களத்தில் இறங்கி சிறப்பானதை தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் தகவல் பதிந்துள்ளார். ஏற்கனவே பும்ரா, ஷ்ரேயாஸ் ஆகியோர் அறுவை சிகிச்சை முடிந்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் முழு உடல்தகுதி பெறுவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஆபரேஷன் சக்சஸ்: ராகுல் உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: