ஒன்றிய அரசை கண்டித்து ஏரலில் காங். தெருமுனை பிரசாரம்

ஏரல், மே 8: ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஊர்வசி அமிர்தராஜ் ஆலோசனைப்படி ஏரலில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர்கள் தாசன், நல்லகண்ணு, புங்கன், பார்த்தசாரதி, கோதண்டராமன், சக்திவேல் முருகன், பாலசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வைகுண்டம் யூனியன் கவுன்சிலர் பாரத் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றிய பாஜ அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நிர்வாகிகள் பேசினர்.

நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் எடிசன், மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் அன்புராணி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிவகளை பிச்சையா, தேழப்பன்பண்ணை சீனிராஜேந்திரன், பிச்சிவிளை ஒன்றிய கவுன்சிலர் சுதாகர், உடன்குடி ராஜன், ஏரல் அம்மாய்தோப்பு தொழிலதிபர் ஜெயராஜ், முன்னாள் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயராஜ், வர்த்தக பிரிவு மாநில செயலாளர் பிரபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கப்பன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் யாசர், பிரியங்கா காந்தி பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கர், அமைப்பு சாரா பிரிவு மாவட்ட தலைவர் வினோத், நகரத் தலைவர்கள் ஏரல் பாக்கர்அலி, வைகுண்டம் கருப்பசாமி,
ஆறுமுகநேரி ராஜாமணி, வை. முன்னாள் நகரத் தலைவர் சித்திரை, பேரூராட்சி கவுன்சிலர்கள் லிங்கபாண்டி, நவீன், அலெக்ஸ், குருசாமி, முத்துவேல், மகளிர் அணி கீதா மற்றும் நிர்வாகிகள் காமராஜ் காந்தி, பிஸ்மிசுல்தான், வேம்புத்துரை, அந்தோணிகாந்தி, ஜெயம், தமிழ், அய்யம்பெருமாள், பிரபு, சார்லி, ராஜேந்திரன், லெட்சுமணன், பேச்சித்துரை, சங்கரமூர்த்தி, மந்திரம், காளி, புகாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து ஏரலில் காங். தெருமுனை பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: