காஞ்சிபுரத்தில் 2,223 ேபர் நீட் தேர்வு எழுதினர்

காஞ்சிபுரம், மே 8: எம்பிபிஎஸ், பிடிஎஸ், மருத்துவ படிப்புக்களில் சேர நுழைவுதேர்வாக நீட் தேர்வு அவசியமாகிறது. நாடு முழுவதும் 499 நகரங்களில் நேற்று தேர்வு நடைபெற்றது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டது.

அதில், காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூரில் உள்ள மகரிஷி இன்டர்நேஷனல் பள்ளியில் 1200 மாணவ, மாணவிகள், அதேபோல் பெரும்புதூர் படப்பை அருகில் உள்ள ஆல்வின் இன்டர்நேஷனல் பள்ளியில் 864 மாணவ, மாணவர்களும் செங்கல்பட்டு மாவட்டம் எஸ்ஆர்எம் காட்டாங்குளத்தூரில் 159 மாணவ, மாணவிகளும் என மொத்தம் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2223 பேர் நீட் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களுக்கு நீட் தேர்வு மைய அதிகாரிகள் மற்றும் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர். தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகள் கடுமையான சோதனைக்கு பின்னரே நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

The post காஞ்சிபுரத்தில் 2,223 ேபர் நீட் தேர்வு எழுதினர் appeared first on Dinakaran.

Related Stories: