மாட்ரிட் ஓபன் பைனல் அல்கரஸ் – ஸ்டர்ப் மோதல்

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பைனலில் உள்ளூர் நட்சத்திரம் கார்லோஸ் அல்கரஸ் – ஜான்-லென்னார்டு ஸ்டர்ப் (ஜெர்மனி) மோதுகின்றனர். (33வயது, 65வது ரேங்க்) நடப்பு யுஎஸ் ஓபன் சாம்பியனான அல்கரஸ் கடந்த ஆண்டு இறுதியில் நம்பர்1 இடத்தையும் பிடித்தார். செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மீண்டும் ஆஸி ஓபனில் சாம்பியன் பட்டம் வெல்ல அல்கரஸ் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

ஆனாலும் கவனித்தக்க வீரராக இளம் வயதிலேயே மாறியுள்ள அல்கரஸ் (19 வயது, 2வது ரேங்க்), மாட்ரிட் ஓபனில் நடப்பு சாம்பியன் என்பதால் இன்றைய பைனலில் அவர் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு அதிகம். ரசிகர்களின் ஆதரவும் கூடுதல் சாதகமாக இருக்கும். எனினும், நடப்பு தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்டர்ப்… காலிறுதியில் சிட்சிபாஸ், அரையிறுதியில் அஸ்லான் காரட்சேவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறி உள்ளார். தகுதிச் சுற்றில் அஸ்லானிடம் தோற்றாலும், ‘லக்கி லூசர்’ அதிர்ஷ்ட வாய்ப்பு மூலம் முதன்மை சுற்றில் களமிறங்கிய ஸ்டர்ப் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து ஏடிபி 1000 அந்தஸ்து தொடரின் பைனலுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். எனவே, பைனலில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இருவரும் இதுவரை 2 முறை மோதியுள்ளதில் 1-1 என சமநிலை வகிக்கின்றனர்.

The post மாட்ரிட் ஓபன் பைனல் அல்கரஸ் – ஸ்டர்ப் மோதல் appeared first on Dinakaran.

Related Stories: