புதுக்கோட்டை: ஒய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் வேங்கைவயலில் விசாரணையை தொடங்கியுள்ளார். ஆதிதிராவிடர் குடியிருப்பில் உள்ள பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. சிபிசிஐடி விசாரணை நடத்தி வரும் நிலையில் ஒரு நபர் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.