நம்புதாளையில் பூக்குழி திருவிழா

 

தொண்டி, மே 6: தொண்டி அருகே உள்ள நம்புதாளை ஆதின மிளகி அய்யனார், பதினெட்டாம்படி கருப்பர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 26 தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. பத்து நாள் மண்டகபடியார் சிறப்பு பூஜை நடைபெற்றது. முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குதல் நேற்று நடைபெற்றது. மேலும் பால் காவடி, பறவை காவடி, வேல் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடி எடுத்து பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து இளைஞர் மன்றம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post நம்புதாளையில் பூக்குழி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: