பேராவூரணி தொகுதியில் ரூ.1 கோடியில் பள்ளி அங்கன்வாடி, நூலகம்: அமைச்சர் திறந்து வைத்தார்

பேராவூரணி, மே 5: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் ரூ. 1 கோடியில் பள்ளி வகுப்பறைகள் அங்கன்வாடி, நவீன நூலகம் உள்ளிட்டவைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

பேராவூரணி ஒன்றியம் இடையாத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம், புனல்வாசல் ஊராட்சியில் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம், சொர்ணக்காடு ஊராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.3.75 லட்சம் மதிப்பீட்டில் நவீன நூலகம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ஆண்டிக்காடு ஊராட்சியில் ரூ.21.45 லட்சத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அரசு கொறடா கோவி. செழியன் முன்னிலையில் திறந்து வைத்து பேசினார். நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் பட்டுக்கோட்டை அண்ணாத்துரை, பேராவூரணி அசோக்குமார், கூடுதல் ஆட்சியர்கள் சுகபுத்ரா, காந்த், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post பேராவூரணி தொகுதியில் ரூ.1 கோடியில் பள்ளி அங்கன்வாடி, நூலகம்: அமைச்சர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: