பணி செய்யா விட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரிக்கை

 

கீழக்கரை, மே 5: கீழக்கரை நகர்மன்ற அவசர கூட்டம் நகராட்சி கூட்டரங்கில் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஹமீது சுல்தான், ஆணையாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: கவுன்சிலர் சஃப்ராஸ் நவாஸ் மற்றும் துணைத் தலைவர் ஹமீது சுல்தான் ஆகியோர் கேட்டகேள்வி, ‘கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பொது நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பெத்தரி தெருவில் பைப்லைன் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர் பழனி எடுத்தார்.

இந்நிலையில் அந்த இடத்தில் பைப் போடுவதற்கு குழிகள் தோண்டப்பட்டு மூன்று மாதங்களாக அப்படியே போட்டு வைத்துள்ளார் ’ என்றனர். துணைத் தலைவர்: அவ்வாறு பணி செய்ய மறுக்கும் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பாதுஷா, காயத்ரி மீரான் அலி. நஸ்ருதீன், முஹம்மது ஹாஜா சுஐபு, சித்திக் உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா, பொறியாளர் அருள், மேற்பார்வையாளர் சாம்பசிவம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

The post பணி செய்யா விட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: