சித்திரை திருவிழாவிற்காக அய்யம்பாளையம் மருதாநதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

பட்டிவீரன்பட்டி, மே 5: பட்டிவீரன்பட்டி அருகேயுள்ளது அய்யம்பாளையம் மருதாநதி அணை. இந்த அணையின் மொத்த உயரம் 72 அடியாகும். கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் கொட்டிய கோடை மழை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அணையில் 54.5 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ள நிலையில், 15 கனஅடி வீதம் தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கின்றது.

ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு மருதாநதி ஆற்றில் சித்தரேவு வரதராஜ பெருமாள் இறங்குவார். இந்த திருவிழாவிற்காக மருதாநதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கமாகும். இந்நிலையில் இன்று மருதாநதி ஆற்றில் வரதராஜபெருமாள் இறங்க உள்ளதையொட்டி நேற்று மருதாநதி அணையிலிருந்து 35 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.

The post சித்திரை திருவிழாவிற்காக அய்யம்பாளையம் மருதாநதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: