மக்களின் கோரிக்கை நிறைவேற்றம் ரூ.80 லட்சத்தில் சாலை,கால்வாய் பணி: நகராட்சி சேர்மன் தகவல்

 

காரைக்குடி, மே 4: காரைக்குடி நகராட்சி 8,9வது வார்டுக்கு கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து ரூ.80 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என நகராட்சி சேர்மன் முத்துத்துரை தெரிவித்தார். காரைக்குடி நகராட்சி கழனிவாசல் புதுரோடு அமைக்கும் பணியை நகராட்சி சேர்மன் முத்துத்துரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதுள்ள படி நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளும் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வளர்ந்து வரும் இந்நகராட்சி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் உறுதுணையுடன் திட்ட பணிகளுக்கு கூடுதலாக நிதி பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

பணியேற்ற ஒரு வருடத்தில் ரூ.46 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 8, 9வது வார்டு பகுதியில் களஆய்வு மேற்கொண்ட போது இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள கழனிவாசல் புதுரோடு மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கை ஏற்று ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் தினமும் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் என 5000க்கும் மேற்பட்டவர்களை பயன்படுத்தி வரும் நிலையில் நீண்ட காலமாக குறுகிய சாலையாகவே இருந்தது.

தற்போது மக்களின் நலன் கருதி நான்கரை மீட்டர் சாலையை எழு மீட்டர் சாலையாக அகலப்படுத்தியுள்ளோம். மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் படிப்படியாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அனைத்து வார்டுகளிலும் கழிவுநீர் கால்வாய், சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. தன்னிறைவு பெற்ற நகராட்சியாக மாற்றுவதை இலக்காக கொண்டு செயல்படுகிறோம் என்றார். நகர்மன்ற உறுப்பினர் கண்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

The post மக்களின் கோரிக்கை நிறைவேற்றம் ரூ.80 லட்சத்தில் சாலை,கால்வாய் பணி: நகராட்சி சேர்மன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: