டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் 11 வது நாளாக போராட்டம்..!!

டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் 11வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருக்கக்கூடிய பிரிஜ் பூஷன் மீது பாலியல் குற்றசாட்டுகள் வைக்கப்பட்டதால் இந்த போராட்டமானது இன்றும் 11 வது நாளாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. இந்த விவகாரத்தில் இரண்டு மாதங்களுக்கு மேலாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதே போல வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று மல்யுத்தவீரர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர் . உச்சநீதிமன்றதில் இந்த விவகாரத்தின் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பான அறிக்கை ஒன்றை மத்திய அமைச்சகத்திடம் கேட்டிருந்த நிலையில் பிரிஜ் பூஷன் மீது அன்று இரவே டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையானது தற்போது வரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் அவருக்கு உறுதியான தண்டனை கிடைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதுவரை தங்களுடைய போராட்டம் தொடரும் என இந்திய மல்யுத்த வீரர்கள் தற்போது ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதற்கான பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மல்யுத்த வீரர்களுக்கு பல்வேறு கட்சிகள் ஆம் ஆத்மீ, திமுக உள்ளிட்ட கட்சிகளில் தங்களுடைய ஆதரவை தெரிவித்து நேரடியாக களத்திற்கு வந்து சந்தித்து பல்வேறு விஷயங்களை கேட்டறிந்து ஆதரவை கூறி வருகின்றனர்.

The post டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் 11 வது நாளாக போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: