வத்திராயிருப்பு, மே 3: நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வத்திராயிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததையடுத்து அணையில் 5 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பெரியாறு அணையின் மொத்த உயரம் 47.56 அடியாகும். அணையில் தற்போதுள்ள நீர்மட்டம் 28.87 அடியாகும். அணைக்கு நீர்வரத்து 58.99 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து நீர் வௌியேற்றம் இல்லை. கோவிலாறு அணையின் மொத்த உயரம் 42.64 அடி. அணையின் தற்போதைய நீர்மட்டம் 12.11 அடியாகும். அணைக்கு நீர்வரத்து இல்லை.
கோவிலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் சரிவர மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து வரவில்லை. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையளவு மி.மீ வருமாறு:
அருப்புக்கோட்டை 22, சாத்தூர் 138, திருவில்லிபுத்தூர் 3.60, சிவகாசி 1, விருதுநகர் 18.60, திருச்சுழி 5.20, வத்திராயிருப்பு 1, வெம்பக்கோட்டை 0.50, கோவிலாங்குளம் 4.80 மி.மீ என பதிவாகி உள்ளது.
The post நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு appeared first on Dinakaran.