உயர் கல்வி நிறுவனங்களில் நடைமுறையில் உள்ள 23 திட்டங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும்: அனுமதி அளித்தது யு.ஜி.சி.

சென்னை: உயர்க்கல்வி நிறுவனங்களில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள 23 திட்டங்கள் தொடர்ந்து செயல்பட யு.ஜி.சி அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் மனிஷ் ஜோஷி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: பல்கலைக்கழக மானியக் குழுவால் இதுவரையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் கீழ்க்கண்ட திட்டங்கள் அடுத்த ஆண்டு (2024) மார்ச் மாதம் 31ம் தேதி வரை தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.

அதன்படி, ‘ஸ்வயம்’ திறந்த நிலை ஆன்லைன் படிப்புகள், மின் உள்ளடக்க மேம்பாட்டு திட்டம், சமூக கொள்கை ஆய்வுக்காக பல்கலைக்கழகங்களில் மையங்களை நிறுவுதல், உயர்கல்வி நிறுவனங்களின் பெண்கள் படிப்புக்கான திட்டம், கல்லூரிகளில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கான பயிற்சி திட்டங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் செயல்படுத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டம், ஆசிரியர்களுக்கான பல்கலைக்கழக மானியக்குழு ஆராய்ச்சி விருதுகள், தேசிய திறன்கள் தகுதி கட்டமைப்பு திட்டம் உள்பட 23 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உயர் கல்வி நிறுவனங்களில் நடைமுறையில் உள்ள 23 திட்டங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும்: அனுமதி அளித்தது யு.ஜி.சி. appeared first on Dinakaran.

Related Stories: