2 மாதங்களில் 3வது சம்பவம் அமெரிக்காவில் மேலும் ஒரு வங்கி திவால் ஆனது

நியூயார்க்: அமெரிக்காவில் சிலிக்கன் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கிகளைத் தொடர்ந்து, பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியும் திவாலாகி விட்டது. இந்த வங்கியை ஜெ பி மோர்கன் சேஸ் வங்கி வாங்கியுள்ளது.
அமெரிக்காவில் முன்னணி வங்கிகளில் ஒன்றான சிலிக்கன் வேலி வங்கி நிதி நெருக்கடியால் திவால் ஆனது. இந்த வங்கியைத் தொடர்ந்து சிக்னேச்சர் வங்கியும் திவால் ஆனது. இந்த நிலையில், 3வதாக, கடும் நிதிச்சிக்கலில் சிக்கியிருந்த, சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியும் திவால் ஆகியுள்ளது. இதையடுத்து இந்த வங்கியை ஜெ பி மோர்கன் சேஸ் வங்கி வாங்கியுள்ளது. பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி, திங்கட்கிழமை முதல் ஜெபி மோர்கன் சேஸ் வங்கியாக செயல்படும் என, பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பொரேஷன் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 13ம் தேிப்படி, பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 18,77,800 கோடியாக மதிப்பிடப்பட்டிருந்தது. அப்போது இந்த வங்கியில் இருந்த மொத்த டெபாசிட்கள் ரூ. 8,52,800 கோடி. அமெரிக்காவிலுள்ள வங்கிகளில் 14வது பெரிய வங்கியாக திகழ்ந்த இந்த வங்கி, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பர்க் உட்பட பெரும் பணக்காரர்களுக்கு கடன் கொடுத்திருந்தது, சிலிக்கன் வேலி மற்றும் சிக்னேச்சர் வங்கியைப் போலவே, இந்த வங்கியில் உள்ள டெபாசிட்களுக்கும் காப்பீடு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இது முதலீட்டாளர்களை கவலையடையச் செய்திருக்கிறது. இந்த வங்கியில் 4,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிவதாக கூறப்படுகிறது.

The post 2 மாதங்களில் 3வது சம்பவம் அமெரிக்காவில் மேலும் ஒரு வங்கி திவால் ஆனது appeared first on Dinakaran.

Related Stories: