சாலை ஆய்வாளர் பணி 761 பணியிடங்களுக்கு 7ம் தேதி எழுத்து தேர்வு: ஹால்டிக்கெட் வெளியீடு

சென்னை: சாலை ஆய்வாளர் பணியில் காலியாக உள்ள 761 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வருகிற 7ம் தேதி நடக்கிறது. இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணைய
தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவியில் காலியாக உள்ள 761 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி வெளியிட்டது. இந்த நிலையில் சாலை ஆய்வாளர் பணிக்காக தேர்வு வருகிற 7ம் தேதி நடக்கிறது. இந்த நிலையில் இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில், ‘எழுத்து தேர்வு வருகிற 7ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள்(ஹால்டிக்கெட்) தேர்வாணையத்தின் இணையதளமான ww.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பெற முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சாலை ஆய்வாளர் பணி 761 பணியிடங்களுக்கு 7ம் தேதி எழுத்து தேர்வு: ஹால்டிக்கெட் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: