கோடை விடுமுறை எதிரொலி; திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

காரைக்கால்: காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் புகழ்பெற்ற சனீஸ்வர பகவான் சன்னிதானம் உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் நேற்று சனிக்கிழமை என்பதாலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். அதிகாலை பக்தர்கள் நலன் தீர்த்தத்தில் புனித நீராடி, பின்பு நலன் விநாயகரை வழிபட்டனர்.

தொடர்ந்து மூலவர் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரை தரிசனம் செய்து, பின்னர் ஸ்ரீசனி பகவானை தரிசித்தனர். சனிக்கிழமைகளில் வழக்கமாக கோயில் அதிகாலை மணிக்கு நடை திறக்கப்படும் நிலையில் நேற்று அதிக அளவிலான பக்தர்கள் வருகை தந்ததால் 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதிகாலை முதல் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர். சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அர்ச்சனைகள் நடைபெற்றது.

The post கோடை விடுமுறை எதிரொலி; திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: