மகளிர் சுயஉதவி உறுப்பினர்களுக்கான ரங்கோலி போட்டிகள்

 

அரியலூர்:அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்ப்பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் 7-வது புத்தகத் திருவிழாவில் ஏழாம் நாளான நேற்று காலை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் திட்ட சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மகளிருக்கான ரங்கோலி போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்கள், 2 நகராட்சிகள், மற்றும் 2 பேரூராட்சிகளில் உள்ள 20 மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள 225 நபர்கள் கலந்துகொண்டு பாரம்பரிய உணவு முறைகள், சுகாதாரம், அனைவருக்கும் கல்வி மற்றும் பெண்களின் திறமைகள் குறித்து விழிப்புணர்வு கோலங்கள் வரைந்தார்கள்.

இதில் ஜெயங்கொண்டம் வட்டாரம், குருவாலப்பர்கோவில் அட்சயம் சுய உதவிக்குழுவினர் முதல் பரிசையும், அரியலூர் வட்டாரம், எருத்துக்காரன்பட்டி ஊராட்சி அத்திப்பூக்கள் சுய உதவிக்குழுவினர் இரண்டாம் பரிசையும், ஜெயங்கொண்டம் வட்டாரம், தத்தனூர் ஊராட்சி தென்றல் சுய உதவிக்குழுவினர் மற்றும் உட்கோட்டை ஊராட்சி ஓம்சக்தி சுய உதவிக்குழுவினர் மூன்றாம் பரிசையும் பெற்றனர். ரங்கோலிப் போட்டியில் வெற்றி பெற்ற மேற்கண்ட மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் வழங்கினார்.

The post மகளிர் சுயஉதவி உறுப்பினர்களுக்கான ரங்கோலி போட்டிகள் appeared first on Dinakaran.

Related Stories: