கரூர் மாவட்டத்தில் கிராம கோயில்களின் திருவிழா

 

கரூர்: கரூர் மாவட்டத்தில் கிராம கோயில்களின் திருவிழா களை கட்டத் துவங்கியுள்ளது. ஆண்டுதோறும் கரூர் மாவட்டத்தில் பங்குனி, சித்திரை மாதங்களில் கிராம கோயில்களில் மூன்று நாட்கள் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கிராம கோயில்களில் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், கரூர் பகுதியில் மாரியம்மன் கோயில், அரவக்குறிச்சி பகுதியில் மகா மாரியம்மன் கோயில், பசுபதிபாளையம் பகுதியில் மாரியம்மன் கோயில், க.பரமத்தி பகுதியில் கருப்பண்ண சுவாமி கோயில், சின்னதாராபுரம் பகுதியில் முனியப்ப சாமி கோயில், வெள்ளியணை பகுதியில்  பாம்பலம்மன் கோயில், லாலாப்பேட்டை பகுதியில் பகவதியம்மன் கோயில் என கரூர் மாவட்டம் முழுதும் நேற்று

50க்கும் மேற்பட்ட கிராம கோயில்களில் திருவிழா நடைபெற்றது. அந்தந்த கோயில்களில் கரகம் பாவித்தல், இதனைத் தொடர்ந்து, பால்குடம், முளைப்பாரி வைத்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிராம கோயில் விழா காரணமாக கருர் மாவட்டம் பரபரப்புடன் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தந்த காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். தொடர்ந்து, மாவட்டத்தின் அனைத்து கோயில்களிலும் கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் விழா நடைபெறும் வரை கிராம கோயில்களில் தொடர்ந்து திருவிழாக்கள் நடத்தப்படும் என கூறப்படுகிறது.

The post கரூர் மாவட்டத்தில் கிராம கோயில்களின் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: