இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் நியமனம்

 

கூடலூர்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவராக இருந்த முகமது ஹாஜி மறைந்ததையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் உயர்மட்ட குழு கூட்டம் துனைத் தலைவர் பாப்பு ஹாஜி தலைமையில் நெலாக்கோட்டை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் ஹனிபா தலைமை வகித்தார்.

உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மஜீத் ஹாஜி எருமாடு, அப்துல் பாரி ஹாஜி பந்தலூர், யூசுப் ஹாஜி, குஞ்சாவ ஹாஜி, அலி உப்பட்டி, இன்னிமொய்தீன் செம்பாலா, சவுகத் படந்தரை, பைசல், நெல்லக்கோட்டை, ஊராட்சி துணைத்தலைவர் நௌபல் மற்றும் ஹாரிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நீலகிரி மாவட்ட புதிய தலைவராக பாப்பு ஹாஜி நியமிக்கப்பட்டார். முன்னதாக மாவட்ட பொதுச்செயலாளர் ஹனிபா வட்டகளரி வரவேற்று பேசினார். அன்வர் மடக்கல் நன்றி கூறினார்.

The post இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: