திருமூர்த்தி அணை பகுதியில் கம்பி வேலியை சேதப்படுத்திய காட்டு யானைகள்

உடுமலை : திருமூர்த்தி அணை பகுதியில் கம்பி வேலியை சேதப்படுத்திய காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருமூர்த்தி அணை அருகே பொதுப்பணித்துறை கோட்ட அலுவலகம் உள்ளது. இதன் அருகே மழை மானிட்டர் கருவி அமைந்துள்ள இடத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காட்டு யானைகள் கோட்ட அலுவலகம் பகுதிக்கு வந்தன. அங்குள்ள கம்பி வேலியை மிதித்து சேதப்படுத்தின. கடந்த காலங்களில் திருமூர்த்தி அணை பகுதிக்கு யானைகள் வந்தது இல்லை.

கடந்த சில வாரங்களாகத்தான் யானைகள் இப்பகுதியில் திரிகின்றன. இப்பகுதியில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பள்ளி, குடியிருப்புகள், பொதுப்பணித்துறை அலுவலகங்கள் உள்ளன. யானைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதையடுத்து, யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருமூர்த்தி அணை பகுதியில் கம்பி வேலியை சேதப்படுத்திய காட்டு யானைகள் appeared first on Dinakaran.

Related Stories: