முசிறி அரசு பள்ளியில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

 

முசிறி, ஏப்.26: திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியத்தில் 1 முதல் மூன்றாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2023- 24ம் ஆண்டுக்கான முதல் கட்ட கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.
முகாமினை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) ஜோதிமணி துவக்கி வைத்தார். வட்டார வளர்ப்பு மைய மேற்பார்வையாளர் அமுதா, வட்டார கல்வி அலுவலர்கள் செல்வமேரி, மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மூன்று நாள் நடைபெறும் பயிற்சி முகாமில், வரும் பருவத்தில் ஒன்றாம் வகுப்பிற்கு எழுத்துக்கள் அறிமுகம், இரண்டாம் வகுப்பிற்கு வார்த்தைகளை கண்டுபிடித்தல், மூன்றாம் வகுப்பிற்கு வார்த்தைகள் அமைத்தல் ஆகிய பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வழங்கினர். பயிற்சி முகாம் மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சுந்தர்ராஜன் மேற்பார்வையில் நடைபெற்றது. முகாமில் முசிறி ஒன்றியத்தில் உள்ள 90 பள்ளிகளை சேர்ந்த 142 ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முகாமில் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஒன்று முதல் மூன்று வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post முசிறி அரசு பள்ளியில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: