திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில் சித்திரை திருவிழா தொடங்கியது மே 3ல் தேரோட்டம்

நாகர்கோவில், ஏப்.26 : திருப்பதிசாரம் கோயில் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 108 வைணவ தலங்களில் ஒன்றான குமரி மாவட்டம் திருப்பதிசாரத்தில் உள்ள திருவாழ்மார்பன் கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்று நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகேஷ், தேரேகால்புதூர் ஊராட்சி தலைவர் சோமு, கோயில் மேலாளர் சண்முகம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் 4ம்தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதி உலா நடக்கின்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 3ம்தேதி காலை 9.05 மணிக்கு நடக்கிறது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில் நுட்பவியல் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட கலெக்டர் தர், எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத், விஜய் வசந்த் எம்.பி., தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். மே 4ம்தேதி 10ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது. பின்னர் இரவு 7 மணிக்கு திருஆறாட்டு நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.

The post திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில் சித்திரை திருவிழா தொடங்கியது மே 3ல் தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: