திருப்புத்தூர் அருகே தேவரம்பூர் ஆரியன் கண்மாயில் மீன்பிடி திருவிழா: போட்டி போட்டு மீன்களை பிடித்து கிராமத்தினர் உற்சாகம்

 

திருப்புத்தூர், ஏப்.23: திருப்புத்தூர் அருகே காட்டாம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட தேவரம்பூர் கிராமத்தில் உள்ள ஆரியன் கண்மாயில் நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் மீன்களை பிடித்தனர்.திருப்புத்தூர் அருகே காட்டாம்பூர் ஊராட்சிக்குட்பட்ட தேவரம்பூர் ஒரு கிராமத்தில் உள்ள ஆரியன் கண்மாயில் விவசாயத்திற்கு பயன்படுத்திய பின்னர், நீர் குறைந்து உள்ளதால், அழித்து மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்தனர்.

முன்னதாக அறிவிக்கப்பட்டு, ஆரியன் கண்மாயில் நேற்று மீன்பிடித் திருவிழா நடந்தது. நேற்று அதிகாலையிலேயே தேவரம்பூர், குறிஞ்சி நகர்,
காக்காலிப்பட்டி, கொழுஞ்சிப்பட்டி, கல்வெட்டு மேடு, கா.பிள்ளையார்பட்டி, சௌமிய நாராயணபுரம், வேலினிப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உட்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் வலை, சேலை. வேட்டி, கூடை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். இதில் கெண்டை, கெளுத்தி, கட்லா, குறவை உள்ளிட்ட மீன்கள் அதிக எண்ணிக்கையில் கிடைத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

The post திருப்புத்தூர் அருகே தேவரம்பூர் ஆரியன் கண்மாயில் மீன்பிடி திருவிழா: போட்டி போட்டு மீன்களை பிடித்து கிராமத்தினர் உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: