ஜெயங்கொண்டம் நகராட்சி அதிமுக, பாமக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

 

ஜெயங்கொண்டம். ஏப்,22: ஜெயங்கொண்டம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டன்போது நகராட்சி பொது நிதியை முறையாக ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து அதிமுக பாமக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி உறுப்பினர்களின் அவசர கூட்டம் நகராட்சி மன்ற தலைவர் சுமதி சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் கருணாநிதி நகராட்சி ஆணையர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்இந்த நகராட்சி கூட்டத்திற்கு வருகை புரிந்த அதிமுக கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டம் துவங்கி ஐந்தாவதாக தீர்மானம் வாசிக்கும் போது ஒமன்ற அங்கீகாரம் இல்லாமல் டெண்டர் விடப்பட்டு தற்போது அனுமதி கேட்கின்றீர்கள் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சாலை பணிகளுக்கும் பொது நிதியை முறையாக ஒதுக்கீடு செய்யாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி அதிமுக கவுன்சிலர்கள் செல்வராஜ் சுப்பிரமணியன் சேகர் பாண்டியன் மற்றும் பாமக கவுன்சிலர்கள் கூட்டத்தின்போதுதரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

இதில் பொது நிதி மற்றும் கலைஞர் மேம்பாட்டு நிதியில் 2022 – 23 ஆம் ஆண்டில் சுமார் ஒரு கோடி அளவிலான சாலை மேம்பாட்டு பணிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணிகள் நகராட்சி அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சாதமாக ஒதுக்கீடு செய்துள்தாக கண்டித்து கோஷங்கள் எழுப்பி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் கூட்டத்தை முடித்து அனைவரும் கலைந்து சென்றனர். ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தில் அதிமுக மற்றும் பாமக கவுன்சிலர்கள் மட்டும் உள் இருப்பு போராட்டத்தில் மாலை வரையிலும் ஈடுபட்டதால் பரப்பு ஏற்பட்டது.

The post ஜெயங்கொண்டம் நகராட்சி அதிமுக, பாமக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: