அரசு மாதிரி பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

ஜெயங்கொண்டம், ஜூன் 15: ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின் பெயரில் மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின் படியும் முதன்மை மாவட்ட தலைமை நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான கிறிஸ்டோபர் சீரிய வழிகாட்டுதலின் படியும் ஜெயங்கொண்டம் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிபதி முனைவர் லதா ஆணையின் படியும் நேற்று ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் குற்றவியல் நடுவர் நீதிபதி ராஜசேகரன் தலைமையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக களப்பணியாளர் வீரமணி, தலைமை காவலர் .

வனிதா, சமூக நலத்துறை விரிவாக்க மைய அலுவலர் ஜெயமங்கலம் , வட்ட சட்டப்பணிகள் குழுவின் பட்டியல் வழக்கறிஞர்பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நீதிபதி ராஜசேகரன் தலைமை உரையில், பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்றும், பெண்கள் அனைத்து துறைகளிலும் முதன்மை வகிக்க வேண்டும் என்றும், குழந்தை திருமண தடைச்சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், போக்சோ சட்டம், சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து, அதனால் ஏற்படும் விபரீதங்கள், சாலை விதிகள், குறித்தும் விரிவாக விளக்கி கூறினார். உதவி தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ் வரவேற்றார்.
ஜெயங்கொண்டம் வட்ட சட்ட பணிகள் குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் புனிதா மற்றும் சட்ட தன்னார்வலர் இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட பாதுகாப்பு அலுவலக களப்பணியாளருடன இணைந்து செய்திருந்தனர். இருபால் ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post அரசு மாதிரி பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: