வேப்பந்தட்டை அருகே வாகன விபத்தில் மனைவி கண்முன் கணவர் பலி

 

பெரம்பலூர், ஜூன்18: வேப்பந்தட்டை அருகே சாலையில் நடந்த வாகன விபத்தில் மனைவி கண் முன்னே கணவன் பலியானார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தாலுக்கா, தொட்டப்பாடி கிராமம், தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் முத்துவீரன் மகன் கலியபெருமாள் (55),இவரதுமனைவி பூமதி (49). இவர்கள் இருவரும் நேற்று காலை தொட்டப்பாடி கிராமத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு, பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் மதுரை காளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளனர்.

இதற்காக ஆத்தூர்- பெரம்பலூர் சாலையில் வேப்பந்தட்டை தனியார் காளான் பண்ணை அருகே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது, வேப்பந்தட்டை தாலுக்கா, பூலாம்பாடி அடுத்த மேலக் குணங்குடி, பஜனைமடத் தெருவைச்சேர்ந்த ராம சாமி மகன் சிவக்குமார் (27) என்பவர் தனது லோடு ஆட்டோ ஒன்றில் வைக்கோல் ஏற்றிச்சென்று பெரம்பலூரில் இறக்கி விட்டு பூலாம்பாடிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது லோடு ஆட்டோ இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் கலிய பெருமாள், கோமதி இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் கலிய பெருமாள் சம்பவ இடத்தி லேயே மனைவி கண் முன் உயிரிழந்தார். தலை மற்றும் கை கால்களில் படுகாயம் அடைந்த கோமதி 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப் பட்டு பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவம் அறிந்து விரைந்து வந்த அரும்பாவூர் போலீ சார் சாலையில் இறந்து கிடந்த கலியபெருமாளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெர ம்பலூர் அரசுத்தலைமை மருத்துவமனைக்கு அனு ப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர் பாக வழக்கு பதிவு செய்து சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேப்பந்தட்டை அருகே வாகன விபத்தில் மனைவி கண்முன் கணவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: