மறுபுறம் சன்ரைசர்ஸ், முதல் 2 போட்டியில் ராஜஸ்தான், லக்னோவிடம் தோல்வி அடைந்த நிலையில் அடுத்த 2 போட்டியில் பஞ்சாப், கொல்கத்தாவை வென்றது. கடைசி போட்டியில் மும்பையிடம் போராடி தோற்ற நிலையில் இன்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் உள்ளது. பேட்டிங்கில் மயங்க் அகர்வால், ஹாரி புரூக், ராகுல்திரிபாதி, கேப்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் என வலுவான வரிசை உள்ளது. இவர்கள் இன்று நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் சென்னையை சொந்த மண்ணில் வெல்லலாம். பவுலிங்கில், மார்கோ யான்சென், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டேவுடன், உள்ளூரில் களம் இறங்கும் வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. இரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 13ல் சிஎஸ்கே, 5ல் சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக மோதிய 5 போட்டியில் சிஎஸ்கே 4ல் வென்றுள்ளது.
சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம்: சேப்பாக்கம் மைதானம் எப்போதும் சுழற்பந்துவீச்சுக்குதான் சாதகமாக இருக்கும். இந்த சீசனி்ல் இதுவரை இங்கு 2 போட்டிகள் நடந்துள்ளன. இதில் சுழற்பந்து வீச்சாளர்கள் 16, வேகப்பந்து வீச்சாளர்கள் 11 விக்கெட் எடுத்துள்ளனர். இன்று சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சேப்பாக்கத்தில் சிஎஸ்கே கடைசியாக ஆடிய 23 போட்டிகளில் 19ல் வென்றுள்ளது.
The post சேப்பாக்கத்தில் இன்று சிஎஸ்கேவுடன் மோதல்: வெற்றிப்பாதைக்கு திரும்ப சன்ரைசர்ஸ் முனைப்பு appeared first on Dinakaran.
