மணப்பாறை, வையம்பட்டியில் தீத்தொண்டு நாள் வார விழா

மணப்பாறை,ஏப்.21: திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் வையம்பட்டி தீயணைப்புத்துறையினர் சார்பில் தீத்தொண்டு நாள் வார விழாவினை முன்னிட்டு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தீயணைப்புத்துறை சார்பில் கடந்த ஏப்ரல் 14 ம் தேதி முதல் 20 ம் தேதி வரை தீத்தொண்டு நாள் வாரவிழா நாடு முழுவதும் கடைபிடித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மாவட்ட அலுவலர் அனுசியா அறிவுறுத்தலின்பேரில் மணப்பாறையில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மணப்பாறை நிலைய அலுவலர்(போ) மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் மருத்துவர் மலைதுரை, மருத்துவர் ராஜராஜன், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

அதேபோல், வையம்பட்டி நிலைய அலுவலர் கதிர்வேல் தலைமையில் ஆலத்தூர் கலர் ஜெர்ஸி ஆயுத்த ஆடை நிறுவனத்தில் தீயணைப்புத்துறை வீரர்கள் ஆலை தொழிலாளர்களுக்கு தீயணைப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சியை செய்து காண்பித்தனர். மேலும் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஆலை மனிதவள மேலாளர் திலகவேணி விஜயராகவன் உள்ளிட்ட ஆலை நிர்வாகிகள், தொழிலாளர்கள், பணியாளர்கள், பாதுகாப்பு அலுவலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

The post மணப்பாறை, வையம்பட்டியில் தீத்தொண்டு நாள் வார விழா appeared first on Dinakaran.

Related Stories: