தேவகோட்டையில் சித்திரை திருவிழா தேரோட்டம்

தேவகோட்டை, ஏப்.20: தேவகோட்டை வெள்ளையன் ஊரணி தென்கரையில் பிரசித்தி பெற்ற ரெங்கநாதப்பெருமாள் கோவிலில் 140வது பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளினர். மாலை 5மணிக்கு பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். மேளதாளத்துடன் நான்கு ரத வீதிகளில் தேர் பவனி வந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பரம்பரை டிரஸ்டி அழகுசோமசுந்தரம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

The post தேவகோட்டையில் சித்திரை திருவிழா தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: