உத்தரப் பிரதேச பாஜக ஆட்சியில் 6 ஆண்டுகளில் 183 என்கவுண்ட்டர்கள்.. விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

டெல்லி : உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் கடந்த 6 ஆண்டுகளில் 183 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜை சேர்ந்த முன்னாள் எம்பி. மற்றும் பிரபல ரவுடியான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகிய இருவரையும் 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரும் 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து ஆதிக் அகமது, அஷ்ரப்பின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின் அவர்களது சொந்த ஊரில் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.இதனிடையே உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2017 முதல் தற்போது வரை 183 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டது குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது கொலை குறித்து விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

The post உத்தரப் பிரதேச பாஜக ஆட்சியில் 6 ஆண்டுகளில் 183 என்கவுண்ட்டர்கள்.. விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு! appeared first on Dinakaran.

Related Stories: