அமித் ஷா செல்லும் பகுதியில் 3,400 டெட்டனேட்டர் பறிமுதல்: மேற்குவங்கத்தில் அதிரடி

கொல்கத்தா: அமித் ஷா இன்று மேற்குவங்கம் செல்லும் நிலையில், குறிப்பிட்ட பகுதியில் இருந்து 3,400 ெடட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்காலி புத்தாண்டை முன்னிட்டு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்குவங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கு நடக்கும் கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்நிலையில் பிர்பூம் மாவட்டம் குஸ்லாரா பைபாஸ் பகுதியில் செயல்படும் செங்கல் சூளை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மர்ம காரை போலீசார் சோதனை நடத்தினர். அந்த காருக்குள் தலா 200 டெட்டனேட்டர்கள் கொண்ட 17 பெட்டிகள் இருந்தன.

உடனடியாக வெடிபொருளை செயலிழக்கச் செய்யும் வெடிகுண்டு தடுப்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. தொடர்ந்து முராரி போலீசார் காரை பறிமுதல் செய்தனர். பீர்பூம் தனிப்படை போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். எனினும், இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘மொத்தம் 3,400 ெடட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், மகமது பஜார் பகுதியில் நடத்திய சோதனையில் 81,000 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவத்தை என்ஐஏ விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சம்பவமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது’ என்றனர்.

The post அமித் ஷா செல்லும் பகுதியில் 3,400 டெட்டனேட்டர் பறிமுதல்: மேற்குவங்கத்தில் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: