தேவகோட்டை அருகே கோயில் திருவிழாவில் மாட்டு வண்டி பந்தயம்: 56 ஜோடி மாடுகள் பங்கேற்பு

தேவகோட்டை, ஏப்.14: தேவகோட்டை அருகே நல்லாங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வேம்புடைய அய்யனார் கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 56 ஜோடி காளைகள் பங்கேற்றன. நான்கு பிரிவுகளாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் நடு மாட்டில் 11 ஜோடி காளைகளும், பூஞ்சிட்டு பிரிவில் 21 ஜோடி காளைகளும், பெரிய மாட்டில் 10 ஜோடி காளைகளும், கரிச்சான் மாட்டில் 14 ஜோடி காளைகளும் பந்தயத்தில் கலந்து கொண்டன.

பெரிய மாட்டிற்கு 10 மைல் தூரம், நடு மாட்டிற்கு 8 மைல் தூரம், பூஞ்சிட்டு மாட்டிற்கு 5 மைல் தூரம், கரிச்சான் மாட்டிற்கு 6 மைல் தூரம்ம் பந்தய எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது. பச்சைக்கொடி அசைத்தவுடன் சாரதிகள் தங்களின் இலக்குகளை நோக்கி மாட்டு வண்டிகளை அதிக வேகமாக ஓட்டிச் சென்றனர், இப்போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் சாரதிகளுக்கும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது,

The post தேவகோட்டை அருகே கோயில் திருவிழாவில் மாட்டு வண்டி பந்தயம்: 56 ஜோடி மாடுகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: