புதுகை அருகே ஜல்லிக்கட்டு: 700 காளைகள் 250 வீரர்கள் மல்லுக்கட்டு

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த வம்பன் வீரமாகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. புதுகை, திருச்சி, திண்டுக்கல், தஞ்சை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இறுதியாக 700 காளைகள், 250 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டை உதவி கலால் ஆணையரும், புதுக்கோட்டை ஆர்டிஓவுமான (பொ) மாரி கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். வாடிவாசலில் இருந்து முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, கட்டில், மிக்சி, மின்விசிறி, குக்கர், எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

The post புதுகை அருகே ஜல்லிக்கட்டு: 700 காளைகள் 250 வீரர்கள் மல்லுக்கட்டு appeared first on Dinakaran.

Related Stories: