சென்னை: சென்னை விமான நிலையத்தில், தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் மவுனமாக நடிகை திரிஷா நடந்து சென்றார். சென்னையில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், நேற்று மும்பை செல்வதற்காக, நடிகை திரிஷா சென்னை உள்நாட்டு விமான நிலையம், டெர்மினல் 4 புறப்பாடு பகுதிக்கு வந்தார். அப்போது பத்திரிகையாளர்கள், நடிகை திரிஷாவிடம், நடிகர் விஜய் குறித்தான சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது, நடிகை திரிஷா எந்த பதிலும் அளிக்காமல், மவுனமாக விறுவிறு என்று நடந்து, விமான நிலையத்தின் உள்ளே சென்று விட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தவெக தலைவரும் நடிகருமான விஜயின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தனது கணவர் விஜய்யுடன் தான் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்பதால், தங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனக் கூறி மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் கடந்த 4 ஆண்டுகளாக நடிகை ஒருவருடன் விஜய் தொடர்பில் இருப்பதாகவும், அதனை தான் கண்டித்த பிறகும் மீண்டும் அந்த நடிகையுடன் தொடர்பில் இருந்து வருகிறார் எனவும் அந்த மனுவில் அவர் பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் திருவான்மியூர் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய்யும், நடிகை திரிஷாவும் ஒரே மாதிரியான உடைகளை அணிந்து கொண்டு கலந்து கொண்டது சமூக வலைதளத்தில் பெரும் பேசுபொருளாக மாறி, சர்ச்சை வெடித்தது. இந்நிலையில், மும்பை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்திருந்த நடிகை திரிஷாவிடம், இந்த சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அவர் மவுனமாக சென்றது குறிப்பிடத்தக்கது.
