லண்டன்- சென்னை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் திடீர் ரத்து: பயணிகள் பரிதவிப்பு

சென்னை: பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு, லண்டனில் இருந்து சென்னை வந்துவிட்டு, மீண்டும் காலை 7.35 மணிக்கு, சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும். இந்நிலையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், நேற்று லண்டன் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட தயாரானது. அப்போது, விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், சேவை ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று காலை 5.30 மணியளவில் சென்னை வந்து சேர வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானமும், சென்னையில் இருந்து காலை 7.35 மணியளவில் லண்டன் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமும் ரத்தானது. இதனால், லண்டன் செல்ல வேண்டிய 218 பயணிகள் சென்னை விமான நிலையத்திலும், சென்னை வரவேண்டிய பயணிகள் லண்டன் விமான நிலையத்திலும் சிக்கி பரிதவித்தனர்.

Related Stories: