சென்னை: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் சென்னையில், பொங்கல் விழாவின்போது நாட்டுப்புற கலைகள் இடம்பெறும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா சென்னையில் 20 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய 8 இடங்களில் சங்கமம் – நம்ம ஊருதிருவிழா நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் தமிழ்நாட்டின் முக்கிய 8 நகரங்களில் இந்த விழா நடத்தப்படும். விழாக்களில் பங்கேற்க விரும்பும் கலைக்குழுக்கள் கலை பண்பாட்டு துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை நிரப்பி தங்கள் பகுதிக்கான கலை பண்பாட்டு துறையின் மண்டல அலுவலகங்களுக்கு மார்ச் 31ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்கலாம். கலைக்குழுக்களின் 5 நிமிட வீடியோ பதிவு செய்யப்பட்டு கலை பண்பாட்டு துறையால் அமைக்கப்படும் தேர்வு குழுவால் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சங்கமம் திருவிழாவில் நிகழ்ச்சி வழங்குவதற்கான கலைக்குழுக்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விழாக்களில் சிறப்பான நிகழ்ச்சி வழங்கிய கலைக்குழுவினர் மாநில அளவிலான தேர்வுக்குழுவால் தெரிவு செய்யப்பட்டு 2027ம் ஆண்டு சென்னை சங்கமம் விழாவில் வாய்ப்பு பெறுவார்கள்.
சங்கமம் கலை திருவிழாவில் பங்கேற்க கலைக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம்
- சங்கமம் கலை விழா
- சென்னை
- சென்னை சங்கமாம்-நம்ம உரு விழா
- தமிழ்நாடு அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை
- பொங்கல் திருவிழா
- காஞ்சிபுரம்
- சேலம்
- கோயம்புத்தூர்
- மதுரை
- தஞ்சாவூர்
